Site icon Metro People

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கமல்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த், கமலிடம் தொலைபேசியில் பேசி, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

கடந்த வாரம் கமல்ஹாசன் கரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து விட்டதாகவும், எனினும் சில நாட்களுக்குத் தனிமையில் இருப்பார் என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (டிச.4) கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

Exit mobile version