ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் அமர்நாத் யாத்ரி நிவாஸ் திட்டப் பணிகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று ஆய்வு செய்தார்.
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி முடிவடையும் என ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம் (எஸ்ஏஎஸ்பி) அறிவித்துள்ளது.
இந்நிலையில் எஸ்ஏஎஸ்பி கூட்டம், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமர்நாத் வழித்தடத்தில் பல்தல், நுன்வான், சித்ரா, பிஜ்பெஹ்ரா ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பேரிடர் மேலாண்மை மற்றும் யாத்ரி நிவாஸ் வளாகம் திட்டப் பணிகளை மனோஜ் சின்ஹா ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்
பல்தல் மற்றும் நுன்வான் அடிவார முகாம்களில் நடைபெற்று வரும் அடிப்படை கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் எஸ்ஏஎஸ்பி தலைமை செயல் அதிகாரி, உயரதிகாரிகள் மற்றும் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.