சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ-2025 என்ற 2 நாள் வீட்டுவசதி கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
‘இந்து தமிழ் திசை நாளிதழும், I ads & events நிறுவனமும் இணைந்து தமிழ் நாடு சிமெண்ட் கார்ப்பரேசன் லிமிடெட் ஆதரவுடன் நடத்தும், வலிமை சிமெண்ட் வழங்கும் ‘சென்னை பிராப் பர்ட்டி எக்ஸ்போ-2025’ என்ற வீட்டு வசதி கண்காட்சி சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை ஆதித்யா ராம் குழுமத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் சபாரத் தினம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சிக்கு பங்குதார ராக ஆதித்யாராம் குழுமம், இணை பங்குதாரராக ABI எஸ்டேட் நிறுவனம் ஆகியவை செயல்படுகின்றன.
தொடக்க விழாவில், ஆதித்யா ராம் குழுமத்தின் விற்பனை பிரிவு மேலா ளர் சையது ஹபிசுதீன். ABI எஸ்டேட் பிஆர்ஓ என்.முரளிதரன். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சென்னை வட்டம் – 2 மேற்பார்வை பொறியாளர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசன் லிமிடெட் நிர்வாகி (மார்க் கெட்டிங்) டி.எஸ்.சசி. இந்து தமிழ் திசை நாளிதழின் விளம்பர விற்பனை பிரிவு பொது மேலாளர் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2 நாட்கள் நடைபெறும் இந்த கண் காட்சியை ஆதித்யாராம் குழுமத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் சபாரத் தினம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத் தார். இந்த கண்காட்சிக்கு பங்குதார ராக ஆதித்யாராம் குழுமம், இணை பங்குதாரராக ABI எஸ்டேட் நிறுவனம் ஆகியவை செயல்படுகின்றன.
தொடக்க விழாவில், ஆதித்யா ராம் குழுமத்தின் விற்பனை பிரிவு மேலா ளர் சையது ஹபிசுதீன். ABI எஸ்டேட் பிஆர்ஓ என்.முரளிதரன். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சென்னை வட்டம் – 2 மேற்பார்வை பொறியாளர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசன் லிமிடெட் நிர்வாகி (மார்க் கெட்டிங்) டி.எஸ்.சசி. இந்து தமிழ் திசை நாளிதழின் விளம்பர விற்பனை பிரிவு பொது மேலாளர் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள், மனைகள், பட்ஜெட் வீடுகள், சொகுசு வில்லாக்கள், வரிசை வீடுகளுக்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஆதித்யாராம் குழுமம், ABI எஸ்டேட், Russel Foundations உள்ளிட்ட பிரபல தனியார் கட்டுமான நிறுவனங் கள், வீட்டு கடன் வழங்க வங்கிகள் என 42 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, துபாயில் வீடு வாங்கு வதற்காக 101 Premium Properties கத்தை அமைத்துள்ளது. இந்த கண் காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பொது மக்களுக்கு இலவச அனுமதி வழங் கப்படுகிறது. பொதுமக்கள் கண்காட் சியை பார்வையிட்டு. தங்களுடைய கனவு இல்லத்தை நனவாக்கி கொள் ளலாம். இன்று இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
இது குறித்து பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியதாவது: ஆதித்யா ராம் குழுமத்தின் மேலா ளர் (விற்பனை) சையது ஹபிசுதீன்: ஆதித்யாராம் குழுமம் கிழக்கு கடற் கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலையில் வீட்டு மனை,வில்லாக் களை விற்பனை செய்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் அக் கரை, பனையூர், உத்தண்டி பகுதியில் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
பங்குதாரர் அல்லது கூட்டு ஒப்பந்தம் எதுவும் இல்லை. அனைத்துக்கும் ஒரே உரிமையாளர் என்பதால் எந்த பிரச்சினையும் இருக்காது. கிழக்கு கடற்கரை சாலை யில் மட்டும் 250 ஏக்கர் உள்ளது. தற் போது இரண்டு மனை பிரிவுகள். ஒரு வில்லா திட்டங்கள் உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர். தையூரில் மனைகள் விற்பனை செய் யப்படுகிறது.
Russel Foundations திட்ட பொறி யாளர் எடிசன்: எங்கள் நிறுவனம் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கிழக்கு தாம்பரத்தில் கேம்ப் ரோடு முதல் சந்தோசபுரம் வரை பாதுகாப் புடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள். 8,10 குடியிருப்புகள் விற்பனை செய்து வருகிறோம். சதுர அடி ரூ.6.500 முதல் ரூ.8,500 வரை உள்ளது.
101 Premium Properties மேலாளர் தவ்சீப் நவுமன்: நாங்கள் 2018ல் இருந்து கட்டுமானத் துறையில் சீரிய முறையில் செயலாற்றி வருகிறோம். துபாய், அபுதாபியில் வீடுகளை விற்பனை செய்து வருகிறோம். அங்குள்ள தலை சிறந்த நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். முதலீடு செய்ய விரும்பும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கோல்டன் விசா போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகிறோம். அவர்களின் முதலீட்டுக்கு சிறந்த லாபம் கிடைப்பதற்கான உறு தியை தருகிறோம். ரூ.1.5 கோடியில் இருந்து யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ரூ.4.6 கோடிக்கு அதிகமாக முதலீடு செய்பவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படுகிறது.
முதலீடு செய்ய விரும்புவோர் நேரடியாக துபாய் செல்ல வேண்டியது கூட இல்லை. இங்கு இருந்தபடியே முதலீடு செய்யலாம். அனைத்து பணி களையும் நாங்களே கண்காணித்து உதவி செய்கிறோம். அங்குள்ள கட்டுமான நிறுவனங்களுடன் வாடிக்கை யாளர்களை நேரடி தொடர்பை ஏற் படுத்தி தருகிறோம். துபாயில் எங்களது நிறுவனத்துக்கு மிகப்பெரிய மதிப்புள்ளது. எனவே. நம்பி முதலீடு செய்யலாம்.