Site icon Metro People

கோடநாடு வழக்கு : ஜெயலலிதா கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தனிப்படையினர்  பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று ஜெயலலிதா, சசிகலாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுனராக பணியாற்றிய குணசேகரன் என்பவரை தனிப்படையினர்  விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இன்று காலை 10 மணி அளவில் விசாரணை நடைபெறும் காவலர் பயிற்சிபள்ளி வளாகத்தில்  தனிப்படை  போலீசார் முன்பு குணசேகரன்  விசாரணைக்கு ஆஜரானார்.அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி சேரன்குளத்தை சேர்ந்த குணசேகரன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவிற்கு வாகனம் ஓட்டியவர். பின்பு முதல்வர் அலுவலகத்திற்காக  தனியார் டிராவல்ஸ் வாகனங்களையும் குணசேகரன்  ஓட்டியிருக்கின்றார்.

இந்நிலையில் கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் குறித்து விசாரிக்க குணசேகரனை தனிப்படை போலீசார் அழைத்துள்ளனர். இன்று காலை 10:30 மணி முதல் குணசேகரனிடம் தனிப்படை போலீசார்  விசாரணையை  துவங்கி நடத்தி வருகின்றனர்.

Exit mobile version