கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் மறுவிசா ரணைக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தாக் கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவருக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கும்பல் உள்ளே புகுந்து காவலாளியை கொலை செய்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து கேரளா வைச் சேர்ந்த சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேரை கைது செய் தனர். இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, வி.கே.சசிகலா உள்ளிட்ட 8 பேரை சாட்சிகளாக விசாரிக்க கோரி இந்த வழக்கில் கைதான தீபு, சதீஷன், சந்தோஷ்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக உள்ள கோவையைச் சேர்ந்த நகை வியாபாரியும் கோவை மாநகர அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளருமான ரவி என்ற அனுபவ் ரவி, இந்த வழக்கின் மேல்விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், ஒரு குற்ற வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும் என்றும் காவல்துறை விசா ரணை என்பது குற்றம் தொடர்பான உண்மையைக் கண்டறிவதில் பாரபட்சமற்ற, நியாயமான, நேர்மையான விசாரணையை தொடர காவல்துறைக்கு எவ்வித தடையும் இல்லை.
காவல்துறை தாக்கல் செய்யும் மேல்விசாரணை தொடர்பான ஆவணம் மற்றும் அறிக்கையை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பதை விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும் எனக் கூறி அனுபவ் ரவியின் வழக்கை தள்ளுபடி செய்து கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்தும் மறுவிசாரணைக்கு தடை கோரியும் அனுபவ் ரவி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக.29 அன்று மேல்முறை யீடு செய்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி கள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம்நாத், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பொதுவாக மறுவிசாரணை என்பது நீதிமன்ற உத்தரவுப்படி தான் நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வழக்கில் அதுபோன்ற விதிமுறை கள் பின்பற்றப்படவில்லை.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக இந்த வழக்கு விசாரணை முக்கியத் துவம் பெற்றுள்ளது. போலீஸார் விசாரணை நடத்திக்கொண்டே சென்றால் வழக்கும் முடிவில்லா மல் சென்று கொண்டே இருக்கும். எனவே கோடநாடு வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக் கின் மறுவிசாரனைக்கு எந்த தடை யும் விதிக்க முடியாது என்றும் இந்த விவகாரத்தில் தற்போது நாங்கள் தலையிட விரும்ப வில்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
அதையடுத்து மனுதாரர் தரப்பில், இந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.