ஜி.வி.பிரகாஷின் ‘இடிமுழக்கம்’ – பழிவாங்கும் ஆக்‌ஷன் த்ரில்லர்!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம், ‘இடிமுழக்கம்’. காயத்ரி சங்கர், சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சவுந்தரராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் 2-வது சிங்கிளான ‘கானா விளக்கு மயிலே’ என்ற பாடலை நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.

“இது தென் மாவட்டங்களை மையப்படுத்திய பழிவாங்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம். ஜிவி பிரகாஷ் இறைச்சிக் கடை உரிமையாளராகவும் காயத்ரி சங்கர் செவிலியராகவும் நடித்துள்ளனர். படத்தை மே மாதம் வெளியிட உள்ளனர்” என்றது படக்குழு.