கோவை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி எதிரொலியாக கோவை ரயில் நிலையத்தில் சேதமடைந்த தேசிய கொடி மாற்றப்பட்டு புதிய தேசியக் கொடி நிறுவப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலைய வளாகத்தில் பெரிய கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மிகவும் சேதமடைந்து காணப்பட்ட நிலை குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் சமீபத்தில் செய்தி படத்துடன் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் உடனடியாக சேதமடைந்த தேசியக் கொடியை அகற்றிவிட்டு புதிய தேசிய கொடியை அமைத்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் தேசியக் கொடி நிலை குறித்து தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணித்து சேதம் அடைந்தால் உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.