‘இலக்கை துரத்தும்’ பயத்தில் இருந்து மீளுமா சிஎஸ்கே? – பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.

5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்​ரிக் தோல்​வியை சந்​தித்​துள்​ளது. இந்த சீசனை மும்பை அணிக்கு எதி​ராக வெற்​றி​யுடன் தொடங்​கிய சிஎஸ்கே அதன் பின்​னர் நடை​பெற்ற 3 ஆட்​டங்​களி​லும் தோல்​வியடைந்​தது. இந்த 3 ஆட்​டங்​களி​லுமே அந்த அணி இலக்கை துரத்தி வீழ்ந்​துள்​ளது. தோல்வி அடைந்த 3 ஆட்​டங்​களில் இரண்டை சிஎஸ்​கே, சேப்​பாக்​கம் மைதானத்​தில் விளை​யாடி​யிருந்​தது.

180 ரன்​களுக்கு மேல் இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டாலே சிஎஸ்கே அணி அதை எட்​டிப்​பிடிப்​பது என்​பது எட்​டாக்​க​னி​யாக மாறி உள்​ளது. பெங்​களூரு அணிக்கு எதி​ராக197 ரன்​கள், ராஜஸ்​தான்அணிக்கு எதி​ராக 183 ரன்​கள், டெல்லி அணிக்கு எதி​ராக 184 ரன்​கள் இலக்கை விரட்ட முடி​யாமல் தவித்​தது சிஎஸ்கே அணி. இதில் ராஜஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்டத்தை தவிர்த்து மற்ற 2 ஆட்​டங்​களி​லும் இலக்கை துரத்​தும் போது சிஎஸ்​கே​விடம் இருந்து எந்​த​வித போராட்ட குண​மும் வெளிப்​படாதது கடும் விமர்​சனங்​களுக்கு வழி​வகுத்​துள்​ளது

வெற்​றிக்​கான அணிச் சேர்க்​கையை கண்​டறிவதே சிஎஸ்​கேவுக்கு பெரிய இலக்காக மாறி உள்​ளது. ராகுல் திரி​பா​தி, தீபக் ஹூடா, ஜேமி ஓவர்​டன், சேம் கரண் ஆகியோரை நீக்​கி​விட்டு டேவன் கான்​வே, முகேஷ் சவுத்​ரி, விஜய் சங்​கர் ஆகியோரை பயன்​படுத்​திய போதி​லும் சிஎஸ்கே அணி​யால் வெற்​றிப் பாதைக்கு திரும்ப முடிய​வில்​லை. கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட், ஷிவம் துபே ஆகியோரது நிலை​யற்ற பேட்​டிங்​கும் கவலை​யளிக்​கும் வகை​யில் உள்​ளது.
பேட்​டிங்​கில் பவர்​பிளே​வில் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொள்​ளாதது, பந்து வீச்​சில் பவர்​பிளே​வில் எதிரணியை கட்​டுப்​படுத்த முடி​யாதது ஆகியவை ஆட்​டத்​துக்கு ஆட்​டம் பலவீன​மாகி வரு​கிறது. மேலும் கேப்​டன் ருது​ராஜ் களவியூ​கங்​களை அமைப்​ப​தி​லும் தடு​மாற்​றம் அடைவது அணி​யின் பலவீனத்தை அதி​கரிக்​கச் செய்​துள்​ளது.

சுழற்​பந்து வீச்​சாளர்​களை எந்த இடங்​களில் பயன்​படுத்த வேண்​டும் என்​ப​தில் அவர், குழப்​பம் அடைந்​துள்​ள​தாக தெரி​கிறது. இது ஒரு​புறம் இருக்க சுழற்​பந்து வீச்​சில் நூர் அகமது மட்​டுமே நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வ​ராக உள்​ளார். சீனியர் வீரர்​களான ரவீந்​திர ஜடேஜா, ரவிச்​சந்​திரன் அஸ்​வின் ஆகியோரிடம் இருந்து எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறன் இது​வரை வெளிப்​பட​வில்​லை.

வேகப்​பந்து வீச்சை பொறுத்​தவரை​யில் கலீல் அகமது தொடக்க ஓவர்​களில் சிறப்​பாக செயல்​படு​கிறார். ஆனால் அவருக்கு உறு​துணை​யாக வீசுவதற்கு வலு​வான வேகப்​பந்து வீச்​சாளர் இல்​லை. மதீஷா பதிரனா நடுஓ​வர்​களி​லும், இறு​திக்​கட்ட ஓவர்​களி​லும் சிறப்​பாக செயல்​பட்​டாலும் அதற்​கான பலன் இல்​லாமல் உள்​ளது. பேட்​டிங், பந்து வீச்சு பலவீனங்​கள் இருக்​கும் வேளை​யில் சிஎஸ்​கே​வின் பீல்​டிங் திறனும் மங்​கத் தொடங்​கி​யுள்​ளது. நடப்பு சீசனில் 4 ஆட்​டங்​களில் அந்த அணி 7 கேட்ச்​களை தவற​விட்​டுள்​ளது. மற்ற எந்த அணி​களும் இவ்​வளவு அதி​க​மான கேட்ச்​களை கோட்​டை​விட​வில்​லை.

பேட்​டிங்​கில் கடந்த சீசனில் காயத்​துடன் விளை​யாடிய தோனி கடைசி 2 ஓவர்​களில் மட்​டும் களமிறங்​கிய தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்டு பலம் சேர்த்​தார். ஆனால் 43 வயதாகும் அவர், இந்த சீசனில் ராஜஸ்​தான், டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அதிக பந்​துகளை எதிர்​கொண்ட போதி​லும் வெற்​றிக்​கான பங்​களிப்பை வழங்​க​வில்​லை. டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் தோனி 11-வது ஓவரில் களமிறங்​கி​னார். அப்​போது அணி​யின் வெற்​றிக்கு 56 பந்​துகளில் 110 ரன்​கள் தேவை​யாக இருந்​தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *