Site icon Metro People

‘வலிமை’ வில்லனுக்கு திருமணம் – பிரபலங்கள் வாழ்த்து மழை

வலிமை’ படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயாவுக்கு திருமணம் நடைபெற்றது.

தெலுங்குத் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் கார்த்திகேயே கும்மகோண்டா. ‘ஆர் எக்ஸ் 100’ படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள ‘வலிமை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (நவ.21) கார்த்திகேயாவுக்கு தனது நீண்டநாள் காதலியான லோஹிதா ரெட்டியுடன் திருமணம் நடைபெற்றது. ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சமூக வலைதளங்களிலும் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் கார்த்திகேயாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது பள்ளித் தோழியான லோஹிதா ரெட்டியை தான் காதலிப்பதாக சமீபத்தில் கார்த்திகேயா அறிவித்திருந்தார். அவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆக்ஸ்ட் மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version