சென்னை: தொடர்ந்து குறைந்து நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவந்த தங்கம் விலை 5 நாட்களுக்குப் பின்னர் இன்று (ஏப்.9) மீண்டும் உயர்ந்தது.
அதன்படி சென்னையில் இன்று (புதன் கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8290-க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66,320-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.102-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,02,000-க்கும் விற்கப்படுகிறது.
பவுனுக்கு ரூ.2,680 வரை குறைவு: தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பவுன் ரூ.68,000+ கடந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சற்றே ஆறுதல் தரும் விதமாக கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.
ஏப்ரல் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.1,280, ஏப்ரல் 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720, ஏப்ரல் 7-ம் தேதி பவுனுக்கு ரூ.200 குறைந்தது. நேற்று (ஏப்.8) பவுனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 வரை சரிந்தது.
இவ்வாறாக, தொடர்ந்து குறைந்து நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவந்த தங்கம் விலை 5 நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.