ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம் சத்ரு வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் மாநில போலீஸாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் கடந்த புதன்கிழமை தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
இதில் அன்று இரவு தீவிரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
பாதகமான நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலை நிலவிவரும் போதிலும் அங்கு பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.