Site icon Metro People

‘Naa Ready’ பாடல் மாலை 6.30-க்கு வெளியீடு: லியோ படக்குழு அறிவிப்பு

Thalapathy Vijay looks incredible in the first-look poster of Leo | 123telugu.com

சென்னை: தமிழ் திரைத்துறையில் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் ‘நான் ரெடி’ முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 6.30-க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியிடப்படுகிறது.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சேவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் மாதம் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி’ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version