Site icon Metro People

நாமக்கல் | போக்சோ வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை: விசாரணை நடத்திய பெண் போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

போக்சோ வழக்கில் மோகனூரைச் சேர்ந்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, மற்றொருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூலித்தொழிலாளர்கள் ராமதாஸ் (55), செல்வராஜ் (60). சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த 2020 மே மாதம் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ராமதாஸூக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், செல்வராஜூக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அப்போதைய நாமக்கல் மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் புவனேஸ்வரி, தலைமைக் காவலர் ராணி ஆகியோருக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version