சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதம் குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி அவர்களே, சென்னையில் 22.03.2025 அன்று நடைபெற்ற நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் தீர்மானங்களை, பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தங்களிடம் நேரில் அளித்து, தொகுதி மறுவரையறை தொடர்பான எங்கள் கவலைகளை தெரிவிக்க நேரம் கேட்டிருந்தோம்.
ஏற்கெனவே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த முக்கியப் பிரச்சினையில் எங்களது ஒன்றுபட்ட நிலைப்பாட்டைத் தெரிவிக்க தங்களை உடனடியாகச் சந்திக்கக் கோருகிறோம். தங்களது விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.