Site icon Metro People

நீரஜ் சோப்ரா, ரவி குமாா், லவ்லினா, பி.ஆா். ஸ்ரீஜேஷ் உள்ளிட்டோருக்கு தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தேசிய விளையாட்டு விருதுகளை வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.

தேசிய விளையாட்டு விருதுகள் ஒவ்வொருஆண்டும் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதில் நீரஜ் சோப்ரா (தடகளம்), ரவி குமார் (மல்யுத்தம்), லவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டை), பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), அவனி லெகாரா (பாரா துப்பாக்கி சுடுதல்), சுமித் அன்டில் (பாரா தடகளம்), பிரமோத் பகத் (பாரா பாட்மிண்டன்), கிருஷ்ணா நாகர் (பாரா பாட்மிண்டன்), மணீஷ் நர்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்), மிதாலி ராஜ் (கிரிக்கெட்), சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி)ஆகிய 12 பேருக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்வழங்கினார்.

விழாவில் அர்பிந்தர் சிங் (தடகளம்), சிம்ரன்ஜித் கவுர் (குத்துச்சண்டை), ஷிகர் தவன் (கிரிக்கெட்), சி.ஏ.பவானி தேவி (வாள்வீச்சு), மோனிகா(ஹாக்கி), வந்தனா கட்டாரியா (ஹாக்கி), சந்தீப் நர்வால் (கபடி), ஹிமானி உத்தம் (மல்லர் கம்பம்), அபிஷேக் வர்மா (துப்பாக்கி சுடுதல்), அங்கிதா ரெய்னா (டென்னிஸ்), தீபக்புனியா (மல்யுத்தம்), தில்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், வீரேந்திர லக்ரா, சுமித், நீலகண்ட சர்மா, ஹார்திக் சிங், விவேக் சாகா் பிரசாத், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், ஷம்ஷேர் சிங், லலித் குமாா் உபாத்யாய் (ஹாக்கி), வருண் குமாா், சிம்ரன்ஜித் சிங் (ஹாக்கி), யோகேஷ் கதுனியா (பாரா தடகளம்), நிஷாத் குமார் (பாரா தடகளம்), பிரவீன் குமாா் (பாராதடகளம்), சுஹாஸ் யதிராஜ் (பாரா பாட்மிண்டன்), சிங்கராஜ் அதானா (பாரா துப்பாக்கி சுடுதல்), பவினா படேல் (பாரா டேபிள் டென்னிஸ்), ஹர்விந்தர் சிங் (பாரா வில்வித்தை), சரத் குமாா் (பாரா தடகளம்) உள்ளிட்ட 35 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

வாழ்நாள் பிரிவில் துரோணாச்சார்யா விருது டி.பி.உஷப், சர்கார் தல்வார், சர்பால் சிங், அஷன் குமார், தபன் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

வழக்கமான பிரிவில் துரோணாச்சார்யா விருது ராதாகிருஷ்ணன் நாயர் பி, சந்தியா குருங், ப்ரீதம் சிவாச், ஜெய் பிரகாஷ் நௌடியல் மற்றும் சுப்பிரமணியன் ராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது லேகா கே.சி., அபிஜீத் குந்த்தே, டேவிந்தர் சிங் கார்ச்சா, விகாஸ் குமார் மற்றும் சஜ்ஜன் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பஞ்சாப் பல்கலைக்கழகம் (சண்டிகர்) 2021-ம்ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பெற்றது.

Exit mobile version