சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் ஜப்பான் நாட்டில் மே மாதம் வெளியாகவுள்ளது.
தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மாநாடு’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இப்படம் மே மாதம் ஜப்பான் நாட்டில் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும்போது, “நல்ல படம் என்பது ஓர் அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும்.
‘மாநாடு’ தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாநாடு’. சிம்புவுக்கு நீண்ட வருடங்களுக்குப் பிறகு பெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. டைம் லூப்பில் மாட்டிக்கொள்ளும் நாயகன், அவனது பிரச்சினையை எப்படி சமாளிக்கிறான் என்பதே ‘மாநாடு’ படத்தின் கதையாகும்.