சென்னை: தங்கம் விலை புதிய உச்சமாக இன்று (ஏப்.12) ஒரு பவுன் ரூ.70,000- ஐ கடந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மார்ச் 3-ம் தேதி தங்கம் ஒரு பவுன் ரூ.68,480-க்கு விற்பனையானது. அதன் பின்னர் ஏற்றமும், இறக்கமும் இருந்துவந்த தங்கம் விலை ஒரு பவுன் ரூ.69,960 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில் இன்று இன்னொரு புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.70,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ட்ரம்ப் வரி, உலகளாவிய பொருளாதார மந்தநிலை, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50000-ஐ கடந்தது. இந்த ஆண்டு ஏப்ரலில் தங்கம் விலை பவுன் ரூ.70,000-ஐ கடந்துள்ளது. ஒரே ஆண்டில் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சாமானிய மக்களுக்கு தங்கம் ஒரு எட்டாக் கனியாக மாறிக் கொண்டிருக்கிறது.