Site icon Metro People

ஆன்லைனில் டிச.5-ம் தேதி நடைபெறுகிறது – ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் பங்கேற்கலாம்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி வரும் ஞாயிறு (டிச.5) காலை 11 மணிக்கு ஆன்லைனில் நடைபெறுகிறது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அடிப்படை கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதற்கான செலவு உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்கள் அதிகம்.

அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, இத்தேர்வுகளுக்கு படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.5) காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள துலே மாவட்ட ஜில்லா பரிஷத் தலைமை நிர்வாக அதிகாரி சி.வான்மதி,ஐஏஎஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமிஇயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற உள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் http://www.htamil.org/00149 என்ற லிங்க்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Exit mobile version