Site icon Metro People

பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் பா.ரஞ்சித், அடுத்ததாக தயாரிக்க இருக்கும் படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படம் ‘அட்டக்கத்தி’. இதில் கதாநாயகனாக தினேஷ் அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து தினேஷை வைத்து இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற படத்தை பா.ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படமும் கவனம் பெற்றது.

தினேஷ்
இந்நிலையில் மீண்டும் தினேஷ் நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து விட்டதாகவும், அடுத்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

News #PaRanjith #cinema #tamil #Updates #பா.ரஞ்சித்துடன்மீண்டும்இணையும்பிரபலநடிகர்

Exit mobile version