Site icon Metro People

சென்னையில் மீண்டும் 100 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 100.01 விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. அதன் பிறகு கரோனா 2-ம் அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-க்கு விற்பனையானது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல்- டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தநிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து 100.01 ரூபாய்க்கும், டீசல் விலையில் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 95.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version