Site icon Metro People

குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலை தடுக்க ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசி: இன்று முதல் இலவசமாக போடப்படுகிறது

நிமோனியா காய்ச்சலைத் தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசிஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்றுமுதல் இலவசமாகப் போடப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில், பிசிஜி – காசநோய், ஹெபடைடிஸ் பி – கல்லீரல் மற்றும் புற்றுநோய், ஓபிவி – இளம்பிள்ளை வாதம், இன்ப்ளூன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று உள்ளிட்டவைகளுக்கு தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன. அதேபோல், ரோட்டா – வயிற்றுப்போக்கு, எம்.ஆர். – தட்டம்மை மற்றும்ரூபெல்லா நோய், ஜப்பானியமூளைக்காய்ச்சல் ஆகிய தடுப்பூசிகளும் போடப்படுகின்றன.ஆனால்நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசி, அரசு மருத்துவமனைகளில் போடப்படாமல் இருந்தது.

அனைத்து குழந்தைகளுக்கும் இந்தத் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்பதால், தேசியதடுப்பூசி அட்டவணையில் இதுஇணைக்கப்படாமல் இருந்தது.ஆனால் தனியார் மருத்துவமனைகளில் இந்த ஊசி ஒரு தவணைக்குரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், தேசிய தடுப்பூசி அட்டவணையில், ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில், ஆண்டுதோறும், 9.35 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர். இதற்கான,திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சமீபத்தில் தொடங்கிவைத்தார். பிறந்த குழந்தைகளுக்கு ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும்ஒன்பது மாதங்கள் என 3 தவணையாக தடுப்பூசி போடப்படும்.

அதன்படி, அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் மருத்துவமனைகளில் ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசி இன்று முதல், குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version