என் பாதங்கள் புல்லை முத்தமிட்டுக் கொண்டிருக்க, என் செவிகள் ‘மியாவ்’ என்கிற பாடலில் திளைத்தபடி இருந்தன. அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடையே பன்மொழி பேசும் மக்கள் உடல்நலனுக்காகவும் மனநலனுக்காகவும் நடைபயின்று கொண்டிருந்தனர்.
12ஆம் தளத்திலிருக்கும் வீட்டு பால்கனி ஒன்றின் கூண்டிலிருந்த கிளி, நான் அனுபவிக்கும் சுதந்திரத்தைப் பார்த்து ‘கீகீ..’ என்று என் கவனத்தை ஈர்க்க முயன்றுகொண்டிருந்தது. இப்படி அனைத்தையும் ரசித்தபடி வாழ்க்கையை ரசித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் நான், நான் அனுபவித்த வாழ்க்கையின் சுவையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்