எனக்கு எல்லாமே ‘ஆர்ட்’தான்! | காபி வித் மோனிஷா

சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பயணத்தைத் தொடங்கி ‘மாவீரன்’ படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர், மோனிஷா பிளசி. ‘சுழல் 2’ வெப் சீரீஸைத் தொடர்ந்து தற்போது ‘கூலி’, ‘ஜனநாயகன்’ ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் அவருடன் ஒரு காபி கோப்பை உரையாடல்:

சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? – காலை நேரத்தில் படப்பிடிப்பு நடந்தால் சூரியனையும் சேர்த்துப் பார்ப்பேன். மற்றபடி ‘லேட்’டாக எழுறதுதான் வழக்கம்!