Site icon Metro People

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முதல் பருவத் தேர்வு காலஅட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா போன்ற அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் வகையில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ ஏற்கெனவே அறிவித்திருந்தது. முதல் பருவத் தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதத்திலும், 2-ம் பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் என்றும் கூறியிருந்தது.

அப்ஜெக்டிவ் முறையில் தேர்வு

அதன்படி, 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முதல்பருவ தேர்வுக்கால அட்டவணை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புதேர்வு நவ.30 தொடங்கி டிச.11-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு டிச.1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் பருவத் தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் 2-ம் பருவத் தேர்வு அப்போதைய சூழலைப் பொறுத்து அப்ஜெக்டிவ் முறையிலோ அல்லது விரிவாக விடையளிக்கக் கூடிய தேர்வாகவோ நடத்தப்படும் என சிபிஎஸ்இ ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version