Site icon Metro People

கடந்த 8 மாதங்களில் ரூ.165 உயர்வு; சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு : பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை, ரூ.25உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 8 மாதங்களில் ரூ.165 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள், சமையல் காஸ் சிலிண்டர் விலையை மாதம் தோறும் மாற்றி அமைக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத் துக்கான வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.610-ல் இருந்து ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர்,இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்இருந்து எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 4-ம் தேதி ரூ.25-ம், பிப்.15-ம் தேதி ரூ.50-ம்உயர்த்தப்பட்டன. பிப்.25-ம் தேதி மறுபடியும் ரூ.25 உயர்த்தப்பட்டது. அடுத்து, மார்ச் 1-ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்டது.

இதன்படி, ஒரு மாதத்துக்குள் சிலிண்டர் விலை ரூ.125 அதிகரிக்கப்பட்டது. பின்னர், ஏப்ரல் 1-ம் தேதி சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ரூ.25உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, சென்னையில் கடந்த மாதம் ரூ.850.50-க்கு விற்பனையான சமையல் காஸ் சிலிண்டர், ரூ.25 அதிகரித்து ரூ.875.50 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த8 மாதங்களில் மட்டும் சிலிண்டர்விலை ரூ.165 அதிகரித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version