மும்பை: ஆட்டோமொபல் துறைக்கு நிம்மதி அளிக்கும் விதமாக அத்துறை மீது விதிக்கப்பட்ட வரியை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை செய்து வருவதாக வெளியான தகவலையடுத்து ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்துடன் தொடங்கியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது.
முன்னணி 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டு எண் 2.10 சதவீதம் அதிகரித்து (1,577 புள்ளிகள்) 76,734 புள்ளிகளிலும், நிப்டி 2.19 சதவீதம் (500 புள்ளிகள்) உயர்ந்து 23,328 புள்ளிகளிலும் நிலைபெற்றன.
இருப்பினும், சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து காணப்படவே அதிக வாய்ப்புள்ளது என்பதே இத்துறை சார்ந்த வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 4.6 சதவீதம் உயர்ந்தது. நேற்றைய செலாவணி சந்தையைப் பொருத்தவரை தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 39 காசுகள் உயர்ந்து ரூ.85.71-ல் வர்த்தகமானது.