சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம் தொடர்பாக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மதியம் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் புதிதாக சேரும் மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கும் ஹிப்போகிரட்டஸ் உறுதிமொழி ஏற்க வைப்பது ஒரு நடைமுறையாக உள்ளது. இதன்படி சில நாட்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹிப்போகிரட்டஸ் உறுதிமொழிக்குப் பதிலாக மகரிஷி சரக் சபத் எனும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு நேற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் நேரடியாக விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதைத்தவிர்த்து மருத்துவக் கழிவுகள் கையாள்வது,, மருத்துவக்கட்டமைப்புகள் மேம்படுத்தல் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளது மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர்த்து ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத மொழி உறுதி மொழி எடுக்கப்பட்ட சர்ச்சையை ஏற்படுத்தியது