சென்னை: தேசிய சப்-ஜூனியர் வில்வித்தை போட்டியில் தமிழக வீராங்கனை எஸ்.எஸ். மதுநிஷா 2 பதக்கம் வென்றார்.
14-வது தேசிய சப்-ஜூனியர் வில்வித்தைப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 10 வயதான மதுநிஷா, 15 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், 13 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் 2-வது இடம் பிடித்து 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினார்.