வதந்தி’ சீசன் 2 வெப் தொடரில் நாயகனாக நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
2022-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தொடர்தான் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘வதந்தி’. தற்போது இதன் இரண்டாவது சீசனை தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘வதந்தி’ முதல் சீசன் தொழில்நுட்பக் குழுவினரே இதிலும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். முதல் சீசனை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் 2-ம் சீசனையும் இயக்கவுள்ளார். தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள்.