க்ரிஷ் 4’ படத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். மேலும், யஷ் ராஜ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
‘க்ரிஷ்’ வரிசைப் படங்களுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு. இப்படத்தின் 4-ம் பாகம் நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் இருக்கிறது. சமீபத்தில் இதன் இயக்குநர் பொறுப்பில் இருந்து கரண் மல்கோத்ரா மற்றும் தயாரிப்பு பொறுப்பில் இருந்து சித்தார்த் ஆனந்த் ஆகியோர் விலகினார்கள். இதனால் இப்படம் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, ‘க்ரிஷ் 4’ படத்தின் இயக்குநராக பொறுப்பேற்று இருக்கிறார் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். இதில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக ஏற்றுள்ளார்.