சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கான முன் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன், துறை இயக்குநர் ச.கண்ணப்பனுக்கு அனுப்பிய கடிதத்தின் விவரம்: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கு 2020 மார்ச் 10-ம் தேதிக்கு முன்பு சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான முன் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டு என கோரப்பட்டுள்ளது.
இந்த கருத்துருவை பரிசீலனை செய்ததில் மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு 2021 மார்ச் 30-ம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துஉத்தரவிடப்பட்டது. தற்போது இந்தக் காலக்கெடு முடிவடைந்துவிட்டது. மேலும், இது அரசின் கொள்கை முடிவு என்பதாலும் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு தற்போது முன் ஊதிய உயர்வு வழங்கக் கோரும் தங்களின் கோரிக்கையானது நிராகரிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.