‘சர்தார் 2’ பட இசையமைப்பாளர் திடீர் மாற்றம்!

சர்தார் 2’ படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமான யுவன் சங்கர் ராஜா மாற்றப்பட்டு சாம் சி.எஸ் பணிபுரிந்து வருகிறார்.

‘சர்தார் 2’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முதலில் இசையமைப்பாளராக ஒப்பந்தாகி இருந்தார் யுவன். தற்போது அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாம் சி.எஸ் பணிபுரிந்து வருகிறார். இதன் முதல் பாகத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி – சாம் சி.எஸ் கூட்டணி இணைந்து ‘கைதி’ படத்தில் பணிபுரிந்திருந்தது. அதற்கு பிறகு இப்போது தான் ‘சர்தார் 2’ படத்தில் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்த மாற்றம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதன் படப்பிடிப்பு ஏப்ரல் முழுமையாக முடிந்துவிடும்.

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ராஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘சர்தார் 2’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.