ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆல்வார் புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக தலித் சமூகத்தை சேர்ந்த டிக்கா ராம் ஜுல்லி உள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆல்வார் நகரில் கோயில் குடமுழுக்கு விழா ஒன்றில் பங்கேற்றார்.
இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி, பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அகுஜா, அக்கோயில் வளாகத்தில் கங்கை நீரை தெளித்து பூஜைகள் செய்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கியான்தேவ் அகுஜாவை கட்சியிலிருந்து பாஜக சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.