விரதம் என்பது காலங்காலமாக நம் உணவுப் பழக்கத்தில் இருக்கும் ஓர் உணவுமுறை தான். பல சமய நெறிகள் குறிப்பிட்ட காலங்களில் விரதம் இருப்பதை வலி யுறுத்துவதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். கடந்த தலை முறைகளில் விரதங்களைக் கடைப் பிடிப்பது அதிகமாக இருந்தது. இன்றையத் தலைமுறையில் விரதம் இருப்பது குறைந்துவிட்டது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
குறிப்பாக, “காலை உணவைத் தவிர்க்கக் கூடாது; மூன்று வேளை சரியாகச் சாப்பிட வேண்டும்; நேரத் தோடு சாப்பிடாவிட்டால் ‘அல்சர்’ வரும்; உணவு சாப்பிடாமல் ‘பி.பி’ மாத்திரை அல்லது சர்க்கரை நோய்/இதய நோய்களுக்கான மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது” என்று ஊடகங்கள் தொடர்ந்து போதிப்பதால் விரதம் இருப்பது குறைந்து