மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.
அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பத்திரம் வாங்குவதையும் குறைக்கலாம் என்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பானது மீண்டும் ஏற்றம் கண்டு காணப்படுகின்றது. மேலும் இந்திய பொருளாதாரம் குறித்த கணிப்புகளும் சாதமாக வந்து கொண்டுள்ளன. இதனால் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.
இந்தநிலையில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் ஏற்றம் கண்டு வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று காலை 9:18 மணிக்கு 360 புள்ளிகள் அல்லது 0.56 சதவீதம் ஏற்றம் கண்டு 61,653.50 புள்ளிகளாக உயர்ந்தது.
நிஃப்டி 120 புள்ளிகள் அல்லது 0.67 சதவீதம் உயர்ந்து 18,458.75 ஆகவும் உயர்ந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு மற்றும் பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீட்டு முறையே 0.9 சதவிகிதம் மற்றும் 0.8 சதவிகிதம் வலுவாக உயர்ந்து வர்த்தகம் செய்கின்றன. டாடா ஸ்டீல், இன்போசிஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி அதிகம் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று பிற்பகலில் 550புள்ளிகள் வரை உயர்ந்து 61856 ஆக இருந்தது. நிப்டி 147 புள்ளிகள் உயர்ந்து 18486 புள்ளிகளில் வர்த்தகம் செய்து வருகிறது.