Site icon Metro People

மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் நாளில் தொடரும் தற்கொலை மிரட்டல்: முற்றுப்புள்ளி வைப்பார்களா அதிகாரிகள்?

மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு தினமும் அலுவல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். திங்கட்கிழமை தோறும் நடக்கும் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வழக்கத்தைவிட அதிகமானோர் வருகின்றனர். வெள்ளிக்கிழமையில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

இருப்பினும் மக்களுக்கான குறை, புகார்கள் குறித்து அரசு அதிகாரிகள், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் ஆட்சியரிடம் புகார் அளிக்கின்றனர். இவ்வாறு வருபவர்களில் ஓரிருவர் அதிகாரிகள் கவனத்தை ஈர்க்கும் விதமாக மண்ணெண்ணெய் கேன் களுடன் வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவமும் அவ்வப்போது நடக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு, ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அதிகாரிகள் நடவடிக்கையை எதிர்த்து மின்கம்பத்தில் ஏறி தற் கொலை செய்துகொண்டார்.

இதுபோன்ற சம்பவங்களுக் கான காரணம் குறித்து விசாரித்த போது, தங்கள் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவல் துறையினரிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்காததால்தான், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி அடிக்கடி நடப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடன் தொல்லையால் தொழிலாளி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவத்துக்குப் பிறகு, அனைத்து ஆட்சியர் அலு வலகங்களிலும் போலீஸ் பாது காப்பு பலப்படுத்தப்பட்டது. குறை தீர்க்கும் நாளில் மிகவும் கவ னமாக இருக்க, போலீ ஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 40-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. குறைதீர் முகாமுக்கு வரு வோர் போலீஸாரின் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சிப்பது தொடர்கிறது.

செல்லூர் பகுதியில் இடப்பிரச்சி னையில் அதிகாரிகள், காவல் துறையினர் நடவடிக்கை எடுக் காததால் செல்லூர் தாகூர் நகரைச் சேர்ந்த மோகன்குமார்(65), லட்சுமி(55) தம்பதியர் குறை தீர்க்கும் நாளான நேற்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றனர். அவர் களைப் போலீஸார் தடுத்து, தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸாரும் எச்சரித்து அனுப்பினர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி குறித்த நூறுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் தல்லாகுளம் போலீஸாரால் விசா ரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: மக்கள் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரிகளிடம் முறையாகப் புகார் கொடுக்கும்போது, நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிப்பு சம்பவம் தொடர்கிறது.

மதுரையில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். பொது இடத்தில் தீக்குளிக்க முயன்றதாக பாதிக்கப்பட்டோர் மீதே காவல் துறை வழக்குப் பதிவு செய்கிறது.

ஆனால் தற்கொலை முயற்சிக்கு காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சிகள் குறையலாம் என்றார்.

Exit mobile version