ஜி.வி.பிரகாஷுடன் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘பேச்சுலர்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு திரைப்படமான “GOAT”-ல் நடித்தபோது தான் அனுபவித்த கசப்பான தருணங்களை நடிகை திவ்யபாரதி பகிர்ந்துள்ளார். GOAT படப்பிடிப்பின்போது இயக்குநர் நரேஷ் குப்பிலி தன்னை இழிவுபடுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சக நடிகரான சுடிகாலி சுதீர் ஏன் அமைதியாக...
