பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தியுள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் நேற்று நடைபெற்ற ‘75-ஆவது ஆண்டில் இந்தியா மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியதாவது: இட ஒதுக்கீட்டின் முன் ஐஏஎஸ் அதிகாரியின் குழந்தையையும், ஒரு சாதாரண ஏழை விவசாயத் தொழிலாளியின் குழந்தையையும் சமமாகக் கருத முடியாது. எனவே, பட்டியல் சாதியினருக்கான...