அயர்லாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம். அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி இன்று (நவ.20) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி...