Tag: BCCI

Home BCCI
ஆஷஸ் 2-ஆவது டெஸ்டில் ஜோ ரூட் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 325 ரன்கள் குவிப்பு
Post

ஆஷஸ் 2-ஆவது டெஸ்டில் ஜோ ரூட் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 325 ரன்கள் குவிப்பு

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் விட்டுகொடுத்து 325 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில்...

WPL Auction 2026:  விலை போகாத ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி
Post

WPL Auction 2026: விலை போகாத ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி

அடுத்த ஆண்டு 4-ஆவது மகளீர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி விலை போகாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 அணிகள் இடையிலான 4-ஆவது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (நவ.27) டெல்லியில் நடைபெற்றது. ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா...

டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா: மக்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்
Post

டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா: மக்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட், போட்டியில் தோல்வியடைந்ததற்காக நாட்டு மக்களிடன் மன்னிப்பு கேட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட்...

கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கம்?: பிசிசிஐ விளக்கம்
Post

கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கம்?: பிசிசிஐ விளக்கம்

2027 வரை கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக தொடருவார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த மோசமான...

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: 314 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி
Post

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: 314 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி

இந்தியாவிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 314 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முத்துசாமி 109 ரன்கள் அடித்தார். இந்திய...

Post

ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: போட்டி அட்டவணை வெளியீடு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 16-வது ஐ.சி.சி. ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற உள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுகளில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா...

Post

2-ஆவது டெஸ்டில் சுப்மன் கில் விலகல்: கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

கழுத்து வலி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கேப்டன் சுப்மன் கில், கவுஹாத்தியில் நடைபெறவுள்ள 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, துணை கேப்டன் ரிஷப் பண்ட் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். மேலும், ஆடும் லெவனில் கில்லின் இடத்திற்கு இளம் வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்கையில் இந்திய...

Post

சேப்பாக்கம் மைதானம் புதுப்பிப்பு: வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமாக புதுபிக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் டிச.15-ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர். இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது....