இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதம் 5, 18 என, இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில், சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் பிறகு, கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலைகள் குறையாமல் நடவடிக்கை எடுக்க மத்திய...