Tag: BJP

Home BJP
Post

திருப்பரங்குன்றத்தில் வெளியூர்காரர்களால்தான் பதற்றமான சூழல் ஏற்பட்டது: எம்எல்ஏ கோ.தளபதி

திருப்பரங்குன்றத்தில் வெளியூர்காரர்களால்தான் பதற்றமான சூழல் உள்ளது என திமுக எம்எல்ஏ கோ.தளபதி தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன், கோ.தளபதி எம்எல்ஏ மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கோ.தளபதி எம்எல்ஏ கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சினையுமில்லை, ஒற்றுமையுடன் வாழ்கிறோம். ஃப்வ்வெளியூர்க்காரர்கள் தான் இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். எனக்கு 72 வயதாகிறது. உச்சி பிள்ளையார் கோயிலில் முதலில் விளக்கு ஏற்றினர்.பின்னர், கிராம மக்கள்...

Post

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெகவின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க வேண்டும்: தவெகவிற்கு பாஜக கேள்வி

பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஏற்றவே விடமாட்டோம் என்று திட்டமிட்டு சதி செய்து, சட்டத்தை மீறி நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, மிகப் பெரிய அராஜகத்தை தமிழக அரசு செய்தது மன்னிக்க முடியாதது. திமுக அரசின் தூண்டுதலின் பேரில், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டு மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திமுக கூட்டணி...

Post

கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர காவி தீபம் ஏற்றப்படக்கூடாது: அமைச்சர் கோவி செழியன்

கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர காவி தீபம் ஏற்றப்படக்கூடாதுஎன உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், சட்டத்தின்படி எந்த நெறிமுறைகள் இருந்ததோ அதை முதலமைச்சர் செயல்படுத்தினார். தமிழகத்தில் மக்களிடையே, ஆன்மிகம் என்ற பெயரால் மதத்தின் பெயரில் ஒரு தீயை உருவாக்க நினைத்ததை தமிழக முதல்வர் முறியடித்துள்ளார்.அதன்படியே மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களும் செயல்பட்டனர்....

Post

மத்திய அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாதது ஏன்?: மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரின் சர்ச்சை பதில்

முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளார். கோழிக்கோடு பத்திரிகையாளர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டார். மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததுதான் என்று அவர் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “பாஜகவுக்கு வாக்களித்தால்தான் முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்க முடியும். முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாதபோது முஸ்லிம் அமைச்சர்கள் எப்படி இருக்க முடியும்? காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து...

Post

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை சேர்க்க பாஜக முயற்சி: சௌரவ் கோகோய் குற்றச்சாட்டு

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்வதாக அஸ்ஸாம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கௌரவ் கோகோய் குற்றஞ்சாட்டியுள்ளார். பீகாரைத் தொடர்ந்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த...

Post

ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் தேர்வு

பீகாரில் நாளை (நவம்பர் 20) புதிய அரசு அமைய உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ் குமார் இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல், பாஜக சட்டமன்றக் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89, ஜேடியு 85, எல்ஜேபி (ஆர்வி) 19, ஹெச்ஏஎம் 5,...