சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று புட்டபர்த்திக்கு வருகை தந்தார். தொடர்ந்து, சத்ய சாய் பாபாவின் மகா சமாதிக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு மேற்கொண்டார். அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் வேத விற்பண்ணர்கள் வேத கோஷங்கள் முழங்க பிரதமர் மோடியை ஆசீர்வதித்தனர். இதையடுத்து நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில், சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கவுரவிக்கும் வகையில் நினைவு...