இந்தியாவிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 314 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முத்துசாமி 109 ரன்கள் அடித்தார். இந்திய...
