கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பான சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், ‘காங்கிரஸ் உயர் தலைமை அழைத்தால் டெல்லிக்குச் செல்வேன்’ என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்று நவம்பர் 20 அன்று தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தின் முதல் பாதியை கடந்தது. ஆட்சியின் முதல் இரண்டரை ஆண்டு காலம் சித்தராமையா முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் டி.கே.சிவகுமார் முதல்வராகவும் இருப்பார்கள் என பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என அவரின்...
Tag: Congress
இந்தியா-கனடா யுரேனியம் ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் அரசு தான் காரணம்: ஜெய்ராம் ரமேஷ் தகவல்
இந்தியா, கனடா இடையே யுரேனியம் விநியோக ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமே முழுக் காரணம் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பை 50 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்கும்...
தேர்தல் ஆணையத்தின் நடத்தை மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் SIR பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று டெல்லியில் நடத்தினார். இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் வேணுகோபால் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை நடைபெற்று வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுடன்...
டெல்லியில் எஸ்ஐஆருக்கு எதிராக பிரமாண்ட பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு
எஸ்ஐஆர்-க்கு எதிராக டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. பீகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளம், உத்தரப் பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் பணிகள், கடந்த நவ. 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த 12 மாநிலங்களிலும் இதுவரை 95 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக...
