அதிபர் ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில், பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.தென் அமெரிக்க நாடான பிரேசிலில், லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெயிர் போல்சோனாரோ, 2019 முதல் 2022 வரை அதிபராக இருந்தார். கடந்த, 2022ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தொழிலாளர் கட்சி வேட்பாளர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியை தழுவினார். ஆனால் இதை ஏற்க மறுத்து தேர்தல் மோசடி நடைபெற்றதாக புகார் கூறியதால்,...