ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் விட்டுகொடுத்து 325 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில்...
Tag: cricket fans
கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கம்?: பிசிசிஐ விளக்கம்
2027 வரை கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக தொடருவார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த மோசமான...
ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம்: இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை(நவ.21) பெர்த் நகரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை வென்று சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி களம் இறங்கியுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2010- 11-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசஸ் கோப்பையை தான் இங்கிலாந்து அணி வென்றது. அதன்...
2-ஆவது டெஸ்டில் சுப்மன் கில் விலகல்: கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
கழுத்து வலி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கேப்டன் சுப்மன் கில், கவுஹாத்தியில் நடைபெறவுள்ள 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, துணை கேப்டன் ரிஷப் பண்ட் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். மேலும், ஆடும் லெவனில் கில்லின் இடத்திற்கு இளம் வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்கையில் இந்திய...

