மாநிலங்களவைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கருக்கு பிரிவுபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து மனம் வருந்துவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலங்களவையின் புதிய தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தனது பணியை தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி, மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றினர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது உரையில், “மாநிலங்களவைத்...