கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர காவி தீபம் ஏற்றப்படக்கூடாதுஎன உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், சட்டத்தின்படி எந்த நெறிமுறைகள் இருந்ததோ அதை முதலமைச்சர் செயல்படுத்தினார். தமிழகத்தில் மக்களிடையே, ஆன்மிகம் என்ற பெயரால் மதத்தின் பெயரில் ஒரு தீயை உருவாக்க நினைத்ததை தமிழக முதல்வர் முறியடித்துள்ளார்.அதன்படியே மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களும் செயல்பட்டனர்....