சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தற்போது சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது. 19-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவ.15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த...